பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூறிவிட்டு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

September 11, 2019 5 0 0

வடகொரியா திடீரென்று ஏவுகணை சோதனை நடத்தியது… அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய நிலையில் வடகொரியா திடீரென ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியது. இந்த சூழலில் மீண்டும் இருமுறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென்கொரிய தெரிவித்துள்ளது. மேலும் சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய தகவலை அறிந்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. மேலும், வடகொரியாவில் நிலவும் சூழலை நேச நாடுகளுடன் இணைந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Categories: headlines, world news
share TWEET SHARE