மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

September 11, 2019 6 0 0

நன்றி தெரிவித்தனர்… அனைத்து திரையரங்கிலும் ஆன்லைன் டிக்கெட் வசதி செய்ய உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்கம், ஜி.எஸ்.டி யில் சினிமாத்துறைக்கு சில சலுகைகள் வழங்குவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. திரையரங்கில் டிக்கெட் விற்பனை ஆகும்போதே நேரடியாக ஜி.எஸ்.டி தொகை ஜி.எஸ்.டி அக்கவுண்டுக்கு செல்ல நிர்மலா சீதாராமன் வழிவகை செய்வதாக கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் சேவை வரியில் தயாரிப்பாளர்களுக்கு புரிதல் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் அரசுக்கு சேரவேண்டிய ஜி.எஸ்.டி தொகை நேரடியாக செலுத்த தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைத்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக டெல்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் திரையுலகம் சந்திக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE