மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம்… சுகாதார தடுப்பு எச்சரிக்கை

September 11, 2019 5 0 0

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் தரப்பு எச்சரித்துள்ளது. வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் மலேரியா காய்ச்சல் பரவுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது மலேரியா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார். கடந்த வாரத்தில் மாத்திரம் மலேரியா நோயாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 28 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவற்றில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் காணப்படுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories: sri lanka
share TWEET SHARE