மாயமான 7 மாத கர்ப்பிணி பெண்; டுவிட்டரில் புகைப்படத்துடன் பொலிஸார் தகவல்

September 11, 2019 5 0 0

கனடாவில் கரிப்பிணி பெண் காணாமல் போய் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. பிராம்டன் நகரில் டாம்கென் சாலையில் கடந்த ஆக.19ம் தேதி மிச்சேல் போப்ரே (21) என்ற பெண் காணப்பட்டுள்ளார். பின்னர் அவர் காணாமல் போய்விட்டார். மிச்சேல் 7 மாத கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போன அன்று மிச்சேல் பழுப்பு நிற டீசர்ட் மற்றும் ஜுன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் 5 அடி உயரம் உடையவர். இவர் பற்றி தகவல்கள் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று பொலிஸார் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Categories: Canada
share TWEET SHARE