முகமாலை வடக்கு பகுதியில் மனித எலும்பு கூடு எச்சம் கண்டுபிடிப்பு

September 11, 2019 5 0 0

மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு… முகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் மனித கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) குறித்த பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த மனித எலும்புக்கூடு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Categories: sri lanka
share TWEET SHARE