வரும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

September 11, 2019 7 0 0

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்…வரும் சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories: sri lanka
share TWEET SHARE