வாக்குறுதிகள் தொடர்பாக கலந்துரையாடல்… பிரதமர் ரணில் சொல்கிறார்

September 11, 2019 3 0 0

வாக்குறுதி தொடர்பாக கலந்துரையாடல்… அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதி தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்பவும் வழங்கிய எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அதிக நேரம் தேவை என பிரதமர் தெரிவித்துள்ளார். மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும். 2015 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம். அது தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாமே உருவாக்கினோம். அதேபோன்று தற்போது அந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும்” அவர் கூறினார்.

Categories: headlines, sri lanka
share TWEET SHARE