ஹிந்தியில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் சாரா அலிகான் ஜோடி

September 11, 2019 7 0 0

ஹிந்தியில் நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் தற்போது கைவசம் பல தமிழ் படங்கள் வைத்துள்ளார். அசுரன் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சில மாதங்கள் முன்பு மும்பையில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் பேசும்போது தனுஷ் தான் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதை ராஞ்சனா பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் தான் இயக்குவார் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அந்த படம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. அது ரஞ்சனா 2 தான் என்றும், அதில் தனுஷ் ஜோடியாக பிரபல நடிகை சாரா அலிகான் நடிக்கிறார். இவர் முன்னணி பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Cinema
share TWEET SHARE