நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காததால் ரூ.30 கோடி அபராதம்

September 13, 2019 4 0 0

நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காததால் அபராதம்… பஞ்சாபில் உள்ள குராலி- கிர்தாபூர் சாகிப் நெடுஞ்சாலையை முறையே பராமரிக்க தவறிய சொல்கியான் சுங்கச்சாவடிக்கு 30 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரோபார் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராம்பூர் பகுதியில் சொல்கியான் என்ற சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பணி ஒப்பந்தம் பெற்று, கடந்த சில ஆண்டுகளாக குராலி- கிர்தாபூர் சாகிப் நெடுஞ்சாலையை பராமரித்து, வாகன ஓட்டிகளுடன் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு, இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல பணிகள் முடிக்கப்பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர், ஆனால் இந்த நிலை தொடரவே, கடந்த 2018ம் ஆண்டு, சொல்கியான் சுங்கச்சாவடி சுங்ககட்டனம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என தன்னார்வலர் தரப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுங்கச்சாவடி வைத்திருக்கும் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், குராலி சாலையில் விளக்குகள் பொருத்தாது, சாலையின் இருப்பக்க எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், இணைப்புச்சாலை குறியீடு, சாலையின் சில பகுதிகள் தார் இடப்பாடமல் காங்கிரீட் மட்டுமே போடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து அரசின் உத்தரவை கடந்த ஜூலை மாதம் வரை பின்பற்ற தவறியதாக அந்நிறுவனத்துக்கு சுமார் 30 கோடி ரூபாயை அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories: india news
share TWEET SHARE