அமீர்கான் நடிக்கும் படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு?

September 14, 2019 8 0 0

பாலிவுட்டில் அமீர்கான் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் யோகி பாபு என்று கோலிவுட்டில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது. தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் படத்தில் அமீர் கானுடன் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது வென்ற ஆங்கில படமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories: Cinema
share TWEET SHARE