கட்அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்… அதிமுக அட்வைஸ்

September 14, 2019 7 0 0

தவிர்க்க வேண்டும்… கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்களை தவிர்க்குமாறு அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு மற்றும் விளம்பரம் என்ற வகையில் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்திவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்யும் செயல்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்துக்காகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE