சோயா, பட்டாணி சேர்த்த புலாவ் செய்யும் முறை குறித்து உங்களுக்காக!!!

September 14, 2019 2 0 0

உடலுக்கு ஊட்டம் தரும் சோயா, பட்டாணி சேர்த்த புலாவ் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சோயா பட்டாணி புலாவ் செய்ய தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, ஜாதிபத்திரி – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், கொத்தமல்லி, அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். சூப்பரான சோயா பட்டாணி புலாவ் ரெடி.

Categories: womens-tips
share TWEET SHARE