மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்யும் முறை குறித்து உங்களுக்காக!!!

September 14, 2019 7 0 0

மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரம் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இத்தனை சத்துக்கள் மிகுந்த மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்யும் முறை பற்றி உங்களுக்காக..! மரவள்ளிக்கிழங்கு பணியாரம் தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு துருவல் – 2 கப், தோசை மாவு – 1 கப், தேங்காய் துருவல் – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி இறக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை குழிகளில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெடி.

Categories: womens-tips
share TWEET SHARE