மொறு, மொறுப்பான ரிப்பன் பகோடா செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!!

October 7, 2019 50 0 0

தீபாவளி என்றால் பலகாரம் இல்லாமலா. அதிலும் மொறு, மொறுப்பான ரிப்பன் பகோடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம் அல்லவா. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 1 கப், கடலை மாவு- அரை கப், பொட்டுக்கடலை மாவு- அரை கப், மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன், பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன், டால்டா- 3 மேசைக்கரண்டி தேவையான உப்பு. செய்முறை: புழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கெட்டியாக அரைக்கவும். அதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும். ரிப்பன் பகோடா அச்சு வைத்த உரலில் மாவை நிரப்பி சூடான் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான ரிப்பன் பகோடா ரெடி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Categories: womens-tips
share TWEET SHARE