கல்விசார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் தற்காலிக ஒப்பந்தம்

October 8, 2019 49 0 0

தற்காலிக ஒப்பந்தம்… ஒன்ராறியோ மாகாணத்தில் கல்விசார் ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆயிரக்கணக்கான கல்விசார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பணிநிறுத்த போராட்டம் நிறைவடையவிருந்த கால எல்லைக்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக கல்வியமைச்சர் ஸ்டீஃபன் லீஸ்ஸி மற்றும் கனேடிய பொது பணியாளர்களின் ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் அனுகூலம் மிக்க இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாரயிறுதி நள்ளிரவில் அனைத்து தரப்பினரும் நம்பிக்கையுடன் பேரம் பேசினார்கள் என்று கலவியமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம், தொழிற்சங்கம் மற்றும் பாடசாலைகள் சார்ந்த சபைகளுக்கு இடையே பல வாரங்களாக இடம்பெற்ற பதற்றமான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

Categories: Canada
share TWEET SHARE