அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா உதவியிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக தகவல்

October 9, 2019 15 0 0

ரஷ்யாவின் உதவியிருப்பது தெரிய வந்துள்ளது…கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற ரஷ்யா உதவியிருப்பது, புலானாய்வு குழு ஒன்றின் விசாரணையில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. டிரம்ப் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவரே முன்னின்று நடத்திய விசாரணையில் வெளியாகியுள்ள தகவல், அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை தலைமையிடமாக கொண்ட, IRA என சுருங்க அழைக்கப்படும் இணையதள ஆய்வு முகமை, அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவிற்கு இணக்கமான வேட்பாளர் என்ற அடிப்படையில் உதவியது விசாரணை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டண் வெற்றிப்பெறுவார் என்ற சூழலில், அந்த சூழ்நிலையை முழுவதுமாக கெடுக்கும் நோக்குடன், கிரம்ளின் மாளிகை காட்டிய வழியில், டெனால்டு டிரம்புக்கு ஆதரவாக, ரஷ்யாவின் IRA அமைப்பு செயல்பட்டிருப்பதும், புலனாய்வு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில், சமூக வலைதளங்கள் மூலமாக, அமெரிக்கர்களின் மனதை மடைமாற்றி, டொனால்டு டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு, ரஷ்யா உதவியதாக புகார்கள் எழுந்த நிலையில், அதனை, வெள்ளை மாளிகை மறுத்து வந்தது. இந்தச் சூழலில், டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினரை தலைவராக கொண்ட, புலனாய்வு விசாரணை குழுவின் அறிக்கையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Categories: world news
share TWEET SHARE