இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர்… பொதுஜன பெரமுன இளைஞர் அணி செயலாளர் தகவல்

October 9, 2019 31 0 0

இளைஞர்கள் ஏமாற்றப்பட்டனர்… நல்லாட்சியில் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கோகுல கிருஷ்ணா தெரிவித்தார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை எனவும், அவை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தநிலையிலேயே வடக்கிலுள்ள 75 சதவீதமான இளைஞர்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Categories: sri lanka
share TWEET SHARE