கழுகின் பார்வையில் இயற்கை காட்சிகளை வீடியோவாக எடுத்த நிறுவனம்

October 9, 2019 26 0 0

கழுகின் பார்வையில் இயற்கை காட்சிகள்…கழுகின் மேற்புறத்தில் கேமரா பொருத்தப்பட்டு, கழுகுகளின் பார்வையில் இயற்கையின் காட்சிகளை காணக்கூடிய வகையில் தி ஈகிள் விங்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனம் வீடியோ ஒன்று எடுத்துள்ளது. காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், பனிமலை உருகுதல் போன்ற பல்வேறு பேராபத்துகளை குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்த வண்ணம் உள்ளனர். அதற்கு, பல்வேறு விலங்கு மற்றும் பறவை வகைகள் அழிந்து வருவது எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. அதில், ஐரோப்பாவின் மிகப் பெரிய கழுகு வகைகளான வெள்ளை வால் கழுகுகள் அழிந்து கொண்டு வருகின்றன. இதையடுத்து வெள்ளை வால் கழுகுகளை பாதுகாக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டில், ஈகிள் விங்க்ஸ் ஃபவுண்டேஸன் என்ற நிறுவனம், கழுகுகளின் பார்வையில் இயற்கையை காணக்கூடிய வகையில் முயற்சி ஒன்று மேற்கொண்டது. அதன்படி, பயிற்சி பெற்ற வெள்ளை வால் கழுகின் மேற்புறத்தில் கேமராவை பொறுத்தி பறக்க விட்டனர்.

Categories: headlines, world news
share TWEET SHARE