காவல் ஆய்வாளருக்கு குரங்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல்

October 9, 2019 19 0 0

குரங்கு மசாஜ் செய்யும் வீடியோ… உத்திரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைக்கு, குரங்கு ஒன்று மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எத்துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதுண்டு. குறிப்பாக காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்நிலையில், பிலிபிட் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர், மனஅழுத்தத்தை போக்க குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலையில் மசாஜ் செய்து கொண்டிருந்தது. தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories: india news
share TWEET SHARE