சீன எல்லைக்கருகே பீரங்கிகளை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டம்

October 9, 2019 17 0 0

இந்திய ராணுவம் திட்டம்… சீன எல்லைக்கருகே, அருணாச்சலப் பிரதேசத்தில் அதிநவீன எம் – 777 பீரங்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை, சீனா உரிமை கோரி வருகிறது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஹிம் விஜய் என்ற பெயரில், மலைப் பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொள்ளவுள்ள போர் ஒத்திகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பிட்டில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தின்படி 145 பீரங்கிகள் விரைவில் இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அவற்றில் 126 பீரங்கிகளை அருணாச்சலப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories: india news
share TWEET SHARE