நடிகை ரம்யா பாண்டியனின் புள்ளிங்கோ கெட் அப்… செம வைரல்

October 9, 2019 41 0 0

புள்ளிங்கோ கெட்அப்… நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார். இந்த நிலையில் புள்ளிங்கோ கெட்-அப்பில், கிராப் வைத்து கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, ’அதெல்லாம் இல்லை; புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories: Cinema
share TWEET SHARE