நெய்வேலி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது தீவிபத்து

October 9, 2019 20 0 0

நெய்வேலியில் தீவிபத்து… நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது ஏற்பட்ட தீ ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கம் ஒன்றில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, நிலக்கரிகளை எடுத்து செல்லும் கன்வயர்பெல்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்றும், சுரங்கப்பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Categories: india news
share TWEET SHARE