புதர் மண்டிய பகுதிகளில் பற்றி எரியும் தீயால் 30 வீடுகள் சேதம்

October 9, 2019 11 0 0

புதர் மண்டிய பகுதிகளில் பற்றி எரியும் தீ… ஆஸ்திரேலியாவில் புதர் மண்டிய இடங்களில் பற்றி எரியும் தீயில் கருகி சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் அங்காங்கு புதர் மண்டிய இடங்களில் தானாக தீப்பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலுள்ள புதர் பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. இதுவரை 40க்கு மேற்பட்ட புதர்கள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், அதனை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் புதர் தீயில் சுமார் 30 வீடுகள் கருகி சேதமடைந்ததாகவும், முன்னெச்சரிக்கையாக மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: world news
share TWEET SHARE