போதும் நடிப்பு… திருமணத்திற்கு தயாராகிவிட்டார் லட்சுமி மேனன்?

October 9, 2019 18 0 0

போதும்… போதும்… நடிப்பு என்று திருமணத்திற்கு தயாராகி விட்டார் நடிகை லட்சுமி மேனன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிககு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். இதனால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories: Cinema
share TWEET SHARE