வித்தியாசமான புரமோஷனில் இறங்கியுள்ள பிகில் படக்குழுவினர்

October 9, 2019 15 0 0

அட்ராசக்க… அட்ராசக்க… வித்தியாசமாக புரோமஷன்யா என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா? அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், வித்தியாசமான புரமோஷனில் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள். அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கி இருக்கிறது. இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதான் தற்போது கோலிவுட்டை கலக்கி வரும் செய்தி.

Categories: Cinema
share TWEET SHARE