விளம்பரத் தொகையை திரும்பி தர பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்

October 9, 2019 19 0 0

ஒத்துக் கொண்ட பேஸ்புக்… வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கிய வழக்கில், பேஸ்புக் நிறுவனம், 284 கோடி ரூபாயை, தனது விளம்பரதாரர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2015-2016ஆம் ஆண்டுகளில், முகநூல் நிறுவனத்திற்கு, வீடியோ விளம்பரங்களை அளித்த நிறுவனங்கள், அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து, வழக்கை நடத்தி வந்த, பேஸ்புக் நிறுவனம், தற்போது, வீடியோ விளம்பரங்கள் அளித்த நிறுவனங்களோடு, சமரச உடன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்படி வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கியதை இலைமறை காயாக ஒப்புக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட விளம்பரதாரர்களுக்கு, இந்திய மதிப்பில், 284 கோடி ரூபாயை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

Categories: world news
share TWEET SHARE