அதிக இனிப்பு கொண்ட பானங்களின் விளம்பரத்திற்கு தடை

October 13, 2019 10 0 0

அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்கள் விளம்பரத்திற்கு தடை… சிங்கப்பூரில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. சமீபத்தில் சர்வதேச நீரிழிவு சம்மேளனம், உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து, ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை ஓன்றை எடுத்து உள்ளது. அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரப்படுத்துவதால் விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டு அதை சாப்பிடுகின்றார்கள். அதனால், இதை தவிர்க்கவே அதிக இனிப்பு கொண்ட குளிர்பானங்களை விளம்பரங்கள், பத்திரிகை , இணையதளம் , வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய தடை விதித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை உத்தரவுவிட்டுள்ளது. மேலும், இது ஆரம்பம் தான். விரைவில், அதிக இனிப்பு கொண்ட உணவு பொருட்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்க ஆலோசனைகளும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அதில் உள்ள இனிப்பின் அளவை குறைப்பது குறித்து, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories: headlines, world news
share TWEET SHARE