அதி நவீன திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் கண்காட்சி

October 13, 2019 23 0 0

ஹெலிகாப்டர்கள் கண்காட்சி… அதி நவீன திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் கண்காட்சி சீனாவில் நடைபெற்றது. டியான்ஜின் பகுதியில் சீனாவின் விமானத் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் அதி நவீன திறன் கொண்ட ஹெலிகாப்டர்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெலிகாப்டர்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் இடம்பெற்ற பெரிய அளவிலான மற்றும் அதிக திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் வெர்சுவல் ரியாலிட்டி எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. சாதாரணமாக 10 டன் அளவிற்கு எடையை தாங்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக 15 டன் எடையை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது கட்டுமானப்பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவசர தேவைகளுக்கான தேடுதல் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஏற்றார் போலும் கண்காட்சியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் விமானி இல்லாமல் தானாகவே இயங்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 600 கிலோ மீட்டர் தூரம் வரை அதிவேகமாக பயணிக்க கூடியது.

Categories: headlines, world news
share TWEET SHARE