சீனர்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகளை தளர்த்திய இந்தியா

October 13, 2019 14 0 0

இ-விசா கட்டுப்பாடு தளர்வு…சீன அதிபரின் இந்திய வருகையை முன்னிட்டுச் சீனர்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தற்போது இ-விசா காலத்தை மேலும் 30 நாட்கள் நீட்டிப்பதாகவும், இ டிவி கட்டணம் 40 டாலர்களாகக் குறைப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா மூலம் ஒரு முறை வந்து செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-டிவி கட்டணம் 25 டாலராகக் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மிகக் குறைந்த விசா கட்டணமாக இ- டிவி கட்டணம் 10 டாலர்களாக மாற்றப்பட உள்ளது. இதே போல் நீண்ட காலக் கோரிக்கையான, ஒரு முறை விசா பெற்றுப் பல முறை இந்தியா வந்து செல்லும் சலுகைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE