பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும்… சீன பத்திரிகைகளில் செய்தி வெளியீடு

October 13, 2019 1 0 0

இரு நாட்டு உறவகளை வலுப்படுத்தும்… சென்னை மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பு, இரு நாடுகளிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் இந்த சந்திப்பு குறித்த தகவல்களே அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சீனாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘சீனா டெய்லி’ பத்திரிகையில், மோடி, ஜின்பிங் சந்திப்பு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு மத்திய சீனாவின் வூகன் பகுதியில் உள்ள ஹூபை மாகாணத்தில் நடந்த சந்திப்பு இரு தரப்பு உறவுகள், உலகளாவிய நிலைமைகள் குறித்து பேச ஓர் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோடி-ஜின்பிங் சந்திப்பு இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும். இவ்வாறு பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இரு தரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும் என்று சீன பத்திரிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

Categories: headlines
share TWEET SHARE