மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் மிரட்டுகிறார்… அமைச்சர் குற்றச்சாட்டு

October 13, 2019 6 0 0

துணை நிலை ஆளுனர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு… மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் அதிகாரிகளை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மிரட்டுவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏனாமில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அமைச்சரவை முடிவெடுத்தும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏனாம் தொகுதியில் மீனவர்களுக்கு மழைக்காலம், வெள்ளம், புயல் சேதத்துக்கான நிவாரணங்களும் முறையாக வழங்கப்படவில்லை என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் உத்தரவை ஏற்காமலும் ஆளும் அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற வகையிலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகின்றார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Categories: india news
share TWEET SHARE