மாநிலம் தழுவிய பந்த்துக்கு எதிர்கட்சிகள் அழைப்பு

October 13, 2019 5 0 0

மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு… தெலுங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. சம்பள உயர்வு, பல்வேறு வரிகளில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் 4ம் தேதி இரவு முதல் 8 நாள்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி கட்சி தலைவர்களின் கூட்டத்தில், வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்படி காவல்துறைக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களுக்கு தசராவையொட்டி விடப்பட்ட விடுமுறையை 19ம் தேதி வரை நீட்டித்தும் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories: headlines, india news
share TWEET SHARE