வாடிக்கையாளர்கள் அதிருப்தி… சற்றே இறங்கி வந்தது ஜியோ நிறுவனம்

October 13, 2019 5 0 0

வாடிக்கையாளர்கள் அதிருப்தியால் சற்றே இறங்கி வந்துள்ளது ஜியோ நிறுவனம். தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ சில நாட்களுக்கு முன், தனது இலவச சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் இனிமேல் மற்ற நிறுவனங்களுக்கு அழைக்க நிமிடத்திற்கு 6 பைசா என கட்டணம் நிர்ணயித்தது. அதற்கு ஈடாக இன்டர்நெட் சேவை அதிகமாக வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஜியோவின் இந்த முடிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தங்களுக்கு சாதகமாக்கி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டன. இந்நிலையில் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த, ரீசார்ஜ் செய்பவர்களுக்கு முதல் 30 நிமிடம் இலவசம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இதனை முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜியோவின் இந்த புதிய கட்டண அறிவிப்புகள் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: india news
share TWEET SHARE