பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 24 பேர் பலி

December 2, 2019 15 0 0

பேருந்து கவிழ்ந்து விபத்து… ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

அய்ன் ஸ்னோஸி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 43 பயணிகள் இருந்தாகக் கூறப்படுகிறது. வளைவான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வளைவை ஓட்டுநர் கவனிக்கத் தவறியதால் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: 24 பேர் பலி, சிகிச்சை, பேருந்து கவிழ்ந்தது Categories: world news
share TWEET SHARE
Related Posts