மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து அசத்தல்

November 7, 2019 25 0 0

சிறுவனுக்கு குவியும் பாராட்டு… அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான்.

லூசியானா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஹெலனா ஆர்ட்ஸ் அகாடமியின் விளையாட்டு விழா நடந்தது. அப்போது அங்கு மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் டிரம்ஸ் வாசித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது அவர்களுடன் 5 வயதேயான ஜெரேமியா ட்ராவிஸ் என்ற சிறுவனும் அசத்தலாக டிரம்ஸ் வாசித்தான். ஒரு கட்டத்தில் பெரிய மாணவர்கள் இசைகேற்ப நடனமாடிய போது அவர்களைப் போலவே ஜெரேமியாவும் நடன அசைவுகளைச் செய்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஜெரேமியா தனது 2வது வயதில் இருந்து டிரம்ஸ் வாசித்து வருவதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.

Tags: 5 வயது சிறுவன், டிரம்ஸ் வாசித்தான், பாராட்டுக்கள் Categories: world news
share TWEET SHARE
Related Posts