இயக்குனர் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்

December 2, 2019 15 0 0

நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகன் துருவ்வின் ஆதித்ய வர்மா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதனால் அவர் வேறு படம் எதுவும் நடிக்கவில்லை.

அடுத்து அவர் விரைவில் இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் புகைப்பட கலைஞராக நடிக்கிறார் என்றும், 25 கெட்டப்களுக்கு மேல் அவர் தோன்றுவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அமர்’ என பெயர் வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் இந்த படத்தில் ஹீரோயின் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags: இயக்குனர் அஜய் ஞானமுத்து, தகவல்கள், விக்ரம் Categories: Cinema
share TWEET SHARE
Related Posts