திருச்சானூர் கோயில் பஞ்சமி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்

December 2, 2019 11 0 0

புனித நீராடினர்… ஆந்திர மாநிலம் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்ற பஞ்சமி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

கார்த்திகை மாதம் தாயாருக்கு பிரம்மோற்சவம் நடத்தி, அதன் நிறைவு நாளை பத்மாவதி தாயாரின் பிறந்த நாளாக பஞ்சமி தீர்த்தம் என்ற பெயரில் தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது.

இதனையொட்டி, திருச்சானூர் திருக்குளக்கரையில், தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளச் செய்து பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர், சக்கரத்தாழ்வார் திருக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். பின்னர், பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தபடி ஆலயத்திற்கு சென்றார்.

Tags: பத்மாவதி தாயார், புனித நீராடல், மாடவீதி Categories: india news
share TWEET SHARE
Related Posts