உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி திமுக புதிய மனு

December 4, 2019 10 0 0

தடை கோரி திமுக மனு தாக்கல்… ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில், திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு, உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது, பழங்குடியின பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவைத் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்தச் சூழலில், வார்டு மறுவரையறை முடியும் வரை தேர்தல் நடத்த கூடாது என உத்தரவிடக்கோரி திமுக சார்பில் அண்மையில், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில், இன்று, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Tags: உச்சநீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல், புதிய மனுதாக்கல் Categories: india news
share TWEET SHARE
Related Posts