தாய்ஜி பகுதியில் டால்பின் வேட்டை… விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

November 7, 2019 20 0 0

டால்பின் வேட்டைக்கு கண்டனம்… ஜப்பானில் நடத்தப்பட்ட டால்பின் வேட்டைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தாய்ஜி என்ற இடத்தில் வருடாந்திர டால்பின் வேட்டை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக பிரமாண்ட வலையை விரித்து டால்பின்களை அதில் சிக்க வைத்து பின்னர் தங்களின் படகு நிறுத்துமிடத்திற்கு அவற்றை இழுத்து வந்தனர்.

பின்னர் படகில் இருந்தவர்கள் ஈட்டியால் டால்பின்களைக் குத்தினர். அதிலிருந்து தப்பிய டால்பின்களை கடலடி நீச்சல் செய்வோர் கடலுக்குள் சென்று அதனை கொன்று குவித்தனர்.

இவர்களின் இத்தகைய செயலால் தாய்ஜி கடல் பகுதி முழுவதும் ரத்தமயமாகக் காட்சியளித்தது. ஜப்பானியர்களின் இந்த வேட்டைக்கு கிரீன்பீஸ் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Tags: கடும் எதிர்ப்பு, கண்டனம், ஜப்பான், டால்பின் வேட்டை Categories: world news
share TWEET SHARE
Related Posts