சுற்றுலாப்பயணிகள் கார் மீது அமரும் யானை… செம வைரலாகும் வீடியோ

November 6, 2019 166 0 0

கார் மீது அமரும் யானை… தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப்பயணிகளின் கார் மீது யானை அமரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் காவ் யாய் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்டதாக பகிரப்படும் வீடியோவில் சுற்றுலாப்பயணிகளின் காரை, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை மறிக்கிறது. பின்னர் அந்த காரின் கண்ணாடிகளை உடைத்து பக்கவாட்டில் கீழே தள்ள முயற்சிக்கிறது.

அது முடியாமல் போகவே காரின் மேல் அமர்ந்து கொள்கிறது. யானையின் பிடி தளரும் சமயம் பார்த்து அதன் கால்களுக்கு இடையே சிக்கியிருந்த காரை வேகமாக ஓட்டிச் சென்று ஓட்டுநர் உயிர் தப்புவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதில் கார் சேதமடைந்தது. இதையடுத்து காட்டு யானைகளைப் பார்த்தால் முன்னதாகவே வாகனத்தை நிறுத்திவிடுமாறு சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: அமரும், கார் மீது, தாய்லாந்து, யானை, வீடியோ Categories: world news
share TWEET SHARE
Related Posts