“மகா புயல் வலுவிழந்தது… குஜராத்திற்கு ஆபத்து இருக்காது”

November 7, 2019 20 0 0

மகா புயல் வலுவிழந்தது…அரபிக்கடலில் உருவான ’மகா’ புயல் வலுவிழந்ததால் குஜராத் மாநிலத்திற்கு ஆபத்து இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அரபிக்கடலில் உருவான மகா புயல் டையு யூனியன் பிரதேசம் அருகே குஜராத் கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த மகா புயல் மாலையில் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்தது.

அது இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக குஜராத், டையு கடலோர பகுதிகளில் புயலின் தாக்கம் இருக்காது என்றும், குஜராத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: குஜராத், மகா புயல், மையம், வானிலை ஆய்வு Categories: Uncategorized
share TWEET SHARE
Related Posts