சொகுசு படகு மோதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியவர்

November 7, 2019 27 0 0

படகு மோதலில் நூலிழையில் உயிர் தப்பியவர்… பிரேசிலில் சொகுசுப் படகு மோதுவதில் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர்தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

மானாவ்ஸ் என்ற இடத்தில் உள்ள நெக்ரோ ஆற்றில் படகு நிறுத்துமிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் காற்று வாங்குவதற்காக அந்தப் பகுதியின் ஒரு மூலைக்கு வந்து நின்றார்.

அப்போது நிலைதடுமாறி வந்த மேடம் கிரைஸ் என்ற சொகுசுப் படகு ஒன்று, படகு குழாமில் மோதியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த இளைஞரின் தலைமீது அந்தப் படகு மோதவிருந்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் நூலிழையில் கீழே விழுந்து உயிர் தப்பினார்

Tags: சொகுசு படகு, தப்பினார், படகு குழாம், மோதல் Categories: world news
share TWEET SHARE
Related Posts