கடும் மழையால் மட்டக்களப்பில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது

December 1, 2019 67 0 0

நீரில் மூழ்கியது… மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட இருதயபுரம், கறுவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம், புன்னைச்சோலை உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் ஆலோசனைக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ஆகியோர் நேரடியாக பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: தொடர் மழை, நீரில் மூழ்கின, மட்டக்களப்பு Categories: sri lanka
share TWEET SHARE
Related Posts