கடும் பனிப்பொழிவு தொடங்கியது… விமான சேவைகள் ரத்து

November 7, 2019 28 0 0

பனிப்பொழிவு தொடக்கம்… ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு துவங்கியது.

ஸ்ரீநகரில் இந்த பருவத்திற்கான பனிப்பொழிவு நேற்று தொடங்கியதை அடுத்து லால் சவு பகுதியில் உள்ள வீடுகள், மரங்கள், சாலைகள் பனி போர்வைப் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

சுற்றுலா தலமாக திகழும் குல்மார்க் மற்றும் சோனமார்க் பகுதிகளிலும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியதன் காரணமாக இரு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் இமாச்சல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் உள்ள சுர்தார் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு நிலவியது.

Tags: அதிகாலை, இமாச்சல பிரதேசம், கடும் பனிப்பொழிவு Categories: india news
share TWEET SHARE
Related Posts