ஆரோக்கியமான உணவு வரகரிசி அடை செய்யும் முறை குறித்து உங்களுக்காக!!!

November 6, 2019 25 0 0

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வரகரசி அடை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: வரகு – 1 கப், கடலைப் பருப்பு – 1/4 கப்,
துவரம் பருப்பு – 1/4 கப், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், அவல் – 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 6, பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிது, நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி!!!

இதனை நாட்டுச்சர்க்கரையுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அவியலுடனும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியமான உணவு.

Tags: ஆரோக்கியம், நாட்டுச் சர்க்கரை, வரகரிசி அடை Categories: womens-tips
share TWEET SHARE
Related Posts