நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க இனிமேல் அங்க அடையாளங்கள் டிஜிட்டல் தரவாக சமர்ப்பிக்க வேண்டும்

December 4, 2019 191 0 0

இனி டிஜிட்டல் தரவுதான்… கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் இனிமேல் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட அங்க அடையாளங்களை டிஜிட்டல் தரவாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர குடியேற்றம், வேலை, கல்வி அனுமதி உள்ளிட்ட விசாக்களுக்கு கனடாவுக்குள் இருந்தவாறே விண்ணப்பம் செய்பவர்களிடம் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதும் புதிய அங்க அடையாள தரவு சேமிப்பு அமையங்கள் திறக்கப்படுகின்றன.

டிசம்பர் 3-ஆம் திகதிக்கு முன்னர், கனடாவுக்கு வெளியில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் கைரேகை மற்றும் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறையில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கனடாவிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு அங்க அடையாள பதிவு உடனடியாக காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிமக்களும் தற்போதுள்ள நிரந்தர குடியிருப்பாளர்களும் தங்கள் அங்க அடையாளங்களை கொடுக்கத் தேவையில்லை. அங்க அடையாள டிஜிரல் தரவுகளைக் கொடுக்க வேண்டியவர்கள் முதலில் பணம் செலுத்தி அதற்காக விண்ணப்பம் மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

அதன் பின்னர் அவர்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்படும். அதில் அவர் தனது தரவுகளை வழங்க வேண்டிய சேவை மையம் குறிக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று தமது தரவுகளை அவர்கள் பதிவு செய்ய முடியும் என கனேடிய குடிவரவு துறை அறிவித்துள்ளது.

Tags: அங்க அடையாளங்கள், குடிவரவு துறை, டிஜிட்டல் தரவு Categories: Canada
share TWEET SHARE