ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2ம் நாளாக சோதனை

November 8, 2019 19 0 0

2ம் நாளாக தொடரும் அதிகாரிகள் சோதனை… ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது.

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்திலும் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடபெற்றது.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடப்படதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக சோதனை நீடித்து வருகிறது.
முட்டம் துறைமுகத்தில் சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் 11 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர், துறைமுக அலுவலகம், படகு தளம், விசைப்படகுகளின் எண்ணிக்கை போன்றவை குறித்து சோதனை நடத்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சோதனையின்போது, மீன் கொள்முதல் செய்ய வந்திருந்த கேரள வியாபாரிகள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்ததால் மீன் விற்பனை நடைபெறவில்லை.

Tags: ஓட்டம், சோதனை, மீன் கொள்முதல், வருமானவரித்துறை Categories: india news
share TWEET SHARE
Related Posts