அதிகளவான ஈயத்துடன் கூடிய குடிநீர் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் விசாரணை

November 6, 2019 27 0 0

விசாரணை நடக்கிறது… கனடாவில் நாடு முழுவதும், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பெரும் விசாரணைக்கு பதிலளித்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான கனேடியர்கள் அதிக அளவான ஈயத்துடன் கூடிய குழாய் நீரை பருகியமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நகரசபைகளில் நிலவும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஒரு முன்னணி தலைமைப் பாத்திரத்தை ஏற்று செயற்படுமாறு முன்னணி எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு செல்லும் பிரதான நீர் குழாய்கள் ஈய மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்கள் என்று பயனாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதுகுறித்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக் மீட் சிங் கூறுகையில், “இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்தகால கொன்சர்வேடிவ் மற்றும் லிபரல் அரசாங்கங்களிடமிருந்து பழைமையான உள்கட்டமைப்பைப் புதுப்பிக்க நகராட்சிகளுக்கு நிதி வழங்கப்படாமையால் அது பெரும் ஆச்சரியமாக தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: ஈயம் கலந்த தண்ணீர், நகராட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் Categories: Canada
share TWEET SHARE