கமல் போட்டியிடவில்லை? லோக்சபா தேர்தலில் போட்டியில்லை?

March 25, 2019 113 0 0

போட்டியிட வில்லையாம்… லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லையாம்.

லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மையம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்த கமல், மார்ச் 20 அன்று தனது கட்சி சார்பில் தமிழகத்தில் 20 தொகுகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக கமல் முன்பே கூறி இருந்ததால், இந்த பட்டியலில் அவரது பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் கமல் பங்கேற்றார். வரும் சட்டசபை தேர்தலில் களம் காண்பது என்று கமல முடிவு செய்துள்ளாராம். இதனால் இந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் கமல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் கமலை வலியுறுத்தி வருவதாகவும், சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கமல் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags: கமல், சட்டசபை, போட்டியில்லை Categories: Tamil
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *