நான்கு நாட்களுக்கு பிறகு பாதியாக குறைந்த காற்று மாசு

November 7, 2019 26 0 0

பாதியாக குறைந்த காற்று மாசு… கடந்த நான்கு நாட்களுக்கு முந்தையை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் டெல்லியில் காற்று மாசு இன்று பாதியாகக் குறைந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் காற்று மாசு தீவிரம் என்ற நிலையை எட்டியது. பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடானது 450ஐத் தாண்டி விட்டது.

இதை அடுத்து காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. ஒற்றை இரட்டை இலக்கப் பதிவெண் வாகன விதி அமல்படுத்தப்பட்டது.

இந்த விதியானது. காற்று மாசுவைக் கட்டுப்படுத்த ஓரளவு கை கொடுத்தது. காற்றின் வேகமும் சாதகமாக இருப்பதால் டெல்லியில் மாசு குறைந்துள்ளது. இன்று தலைநகரில் காற்றுத் தரக் குறியீடானது 235ஆக உள்ளது. காற்று மாசுவின் நிலை தீவிரத்தில் இருந்து மோசம் எனக் குறைந்தது.

Tags: காற்று மாசு, காற்றுத்தர குறியீடு, தலைநகர், பாதியானது Categories: india news
share TWEET SHARE
Related Posts